திருகோணமலை மாவட்டத்தில் 152 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது கடந்த பத்து ஆண்டுகளாக தன்னுடைய மனிதநேயமிக்க பணிகளை இலங்கையின் பல பாகங்களில் மேற்கொண்டு வருகின்றது
பல அவமானங்கள், ஏமாற்றங்கள் என பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்ற நாம் எம் உறவுகளை வாழ வைக்கின்ற உன்னதமிக்க பணியினை ஆற்றி வருகின்றோம்.
அந்தவகையில், கடந்த 01.09.2024 அன்று பத்தாவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக புதிய இல்லத்தை நிர்மாணிப்பதற்காக முதற்கட்ட செயற்பாடாக அடிக்கல்வைக்கப்பட்டுள்ளது.
இந்த இல்லமானது திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேசத்தில் தங்கபுரம் எனும் கிராமத்தில் யானையினால் தாக்கப்பட்டு இல்லத்தை இழந்த குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது ஸ்தாபகர் பாக்கியராசா கமலநாதன் அண்ணா அவர்கள் வழங்கியுள்ளார்கள் இவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் இல்லம் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 152 ஆவது இல்லமும் SQM Foundation இனது 28 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே விதமாக அனேக குடும்பங்கள் நிரந்தர இல்லமின்றி அல்லலுறுகின்றனர். இவர்களின் துன்பத்தை தீர்க்க உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி