கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை
நீரின்றி அமையாது உலகு.
“ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அந்த வகையில் கடந்த 23.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் சிவநகரில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான ஆகிசன் மற்றும் ஆதுசன் ஆகியோர் வழங்கியுளனர்.
இவர்களுக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.