அம்பாறை மாவட்டத்தில் 105 ஆவது வீடு கையளிப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறான மனிதநேயமிக்க பணிகளையாற்றுகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 01.07.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 105 ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பிரதேசத்தில் தன் காலொன்றை இழந்ததன் நிமித்தம் குடும்பத்தையே நடாத்த முடியாமல் பல்வேறான இன்னல்களைச் சந்திப்பதோடு மாத்திரமில்லாமல் நிரந்தர வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத் தலைவனைக் கொண்ட உறவுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை அல்பாணியா தேசத்தை சேர்ந்தவரும் தற்போது சுவீஸ் தேசத்தில் வாழ்ந்து வருகின்றவருமான பாரூஷ் சபாணி அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் நிதியை பெற்று எமக்கு வழங்கியவர் சுவீஸ் தேசத்தில் வாழ்கின்றதான நீதன் ஆவார். இவருக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவுத்துக் கொள்வதோடு இவ் மகத்தான உதவியினை நல்கிய பாரூஷ் சபாணி அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
JEEVAOOTRU trust
http://www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo