மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை
SQM Foundation இனது நிதி உதவியில் எம் பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 26.06.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 146 ஆவது இல்லத்திற்கானதும் SQM Foundation Canada இனது 26 ஆவது இல்லத்திற்க்கானதுமான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட பெண்பிள்ளையினைக் கொண்ட குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.
இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது பத்தாவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஸ்தாபகர் பாக்கியராசா கமலநாதன் அண்ணா வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
JEEVAOOTRU trust
http://www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo