வவுனியா மாவட்டத்தில் குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை
நீரின்றி அமையாது உலகு. “ஜீவ ஊற்று அன்பின் கரம் ” அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட நெடுங்கேணி பெரிய மடு பகுதியில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கணவன் மற்றும் மகனை இழந்த நிலையில் ஒரு மகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் குடிநீரின்றி பெரும் அசெளகரியங்களை சந்தித்து வந்துள்ளார்.
மிகவும் பின் தங்கிய கிராம்மான் நெடுங்கேணி பெரிய மடு பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த தாயார் தமக்கான குடிநீரினை அநேகமானவர்களிடம் கேட்டு வந்த நிலையில் UKயில் வசிக்கும் ரவி அண்ணா அவர்கள் ஜீவ ஊற்றின் ஊடாக குழாய் கிணறு ஒன்றினை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் கடந்த ( 14.06.2024 ) வவுனியா மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு குழாய் கிணறு ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை
UKயில் வசிக்கும் ரவி அண்ணா வழங்கியுள்ளனர். இவர்களுக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.