கிளிநொச்சி மாவட்டத்தில் 12 குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலும் தன்னுடைய உன்னதமிக்க பணிகளை ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று 01.04.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமையில் அல்லலுறுகின்ற 12 குடும்பத்தினருக்கு உதவியாக 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதி வழங்கப்பட்டுள்ளது.
இவ் உன்னதமிக்க பணிக்கான நிதி உதவியை சுவிற்ஷர்லாந்தில் வாழ்கின்ற அமரர் தம்பு தியாகராஜா ஐயா அவர்களுடைய பதினைந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்
உதவி புரிந்த நல்லுள்ளத்திற்கு எம் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .
நன்றி.