முல்லைத்தீவு மாவட்டத்தில் 111 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது
மனித நேய பணிக்கா புதிய அலுவலகம் திறந்ததைத் தொடர்ந்து இல்லங்களை நிர்மாணிக்கின்ற பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றையநாளிலும் (04.03.2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பகுதியில் 111 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை அமரத்துவமடைந்த பாலவினாயகமூர்த்தி பாலாவினோதியின் (தாமரைச்செல்வி) நினைவாக பாலவினாயகமூர்த்தி பாலயோகமணி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். உதவி நல்கிய யாவருக்கும் அன்பின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.