மட்டக்களப்பு மாவட்டத்தில் 114 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது
புத்தாண்டிலும் புதிய உறவுகளின் பங்களிப்போடு எம் மனிதநேயமிக்க பணிகள் ஆரம்பமாகியது. அந்தவகையில் கிழக்கு மண் மட்டுமாநகர் பெற்றெடுத்த முத்து நீதன் அண்ணா தன்னால் முடிந்த உதவியை எம்மவர்களுக்காற்ற வேண்டும் என்ற சிந்தையோடு செயல்பட ஆரம்பித்துள்ளார்.அந்தவகையில் இரு வீடுகள் மற்றும் மலசலகூடம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை வழங்கியதோடு உதவும் மனம் படைத்தவர்களிடமிருந்து உதவியை பெற்று மக்கள் வாழ்வில் ஒளியேற்றவும் ஆரம்பித்துள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (19.03.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 114 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதூர் பகுதியில் இரு கரங்களுமற்ற குடும்பத் தலைவனைக் கொண்ட குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான சகோதரன் ராஜ்குமார் தனது பிறந்ததினத்தை நினைவுகூர்ந்து வழங்கியுள்ளார். இவர் வழங்கும் இரண்டாவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரன் ராஜ்குமார் அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
_JEEVAOOTRU trust_
Email_info@jeevaootru.org