கிளிநொச்சி மாவட்டத்தில் 125 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (03.07.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 125 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் குளம் பகுதியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் குடும்பசுமையை தன் தோழில் சுமந்து செயற்படுகின்ற பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட உறவிற்கே வழங்கப்படவுள்ளது.
இதற்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் வசிக்கின்றதான [சுதிர் பியுளா ]அவர்கள் வருகின்ற 29.07.2023 அன்று திருமணபந்தத்தில் இணையவுள்ளதை நினைவுகூர்ந்து வழங்கியுள்ளார். இவ் மகத்தான உதவியினை நல்கிய [ சுதிர் பியுளா ]மற்றும் ஆகியோருக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு திருமணவாழ்வு இனிதாக அமைய எம் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
_JEEVAOOTRU trust_
help@jeevaootru.ngo