அம்பாறை மாவட்டத்தில் கற்றலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (04.11.2023) கற்றலுக்கு தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை இலண்டனில் வாழ்கின்றதான ரூபா அன்றி தனது பேரன் யூடாவின் ( சகோதரி ஜெனி அவர்களின் மகன்) இரண்டாவது பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து ரூபா அன்றி அவர்கள் வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் பாலக்காடு எனும் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக மனப்பூர்வமான பிறந்த நாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_