மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
ஜீவஊற்று அன்பின் கரத்தின் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம்.
அந்தவகையில் 06.05.2023 அன்று “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் மட்டக்களப்பு கரடியணாறு பகுதியில் 32 மாணவர்களை தேர்ந்தெடுத்து கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப் பணிக்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கரம் மூலம் Switzerland தேசத்தில் வாழ்கின்றதான சகோதரன் நீதன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இவ் உதவிகளை வழங்கியவருக்கு நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட இவ்வாறு அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.