20 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டமை
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மனித நேய பணிக்காக புதிய அலுவலகம் திறந்ததைத் தொடர்ந்து பல்வேறான பணிகளைத் தொடர்ந்த வண்ணம் உள்ளோம்.
அந்த வகையில் இன்றைய நாளிலும் (05.03.2023) உலர் உணவுப் பொருட்கள் எம் தலைமை அலுவலகத்தில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை ஜேர்மன் தேசத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற மாரநாதா சுவிசேஷ திருச்சபையின் போதகர் போல் அம்பி அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
இவ் உதவியானது எம் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 20 குடும்பத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றி இருந்தனர்.
அன்பு உறவுகளே, இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
விசேடமாக வெளி தேசங்களில் இருந்து எம் நாட்டிற்கு குறிப்பாக முல்லைத்தீவுப் பகுதிக்கு வருவோர் எம் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து அல்லலுறுகின்ற மக்களுக்கு முடியுமான உதவிகளை வழங்கிச் செல்லாம் எனும் மகிழ்வான செய்தியை அன்பு உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
Email- info@jeevaootru.org
Web – jeevaootru.org