முல்லைத்தீவு கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 500000 பெறுமதியான பொருட்கள் வழங்கியமை
கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம்.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (19.01.2023) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் முல்லைத்தீவு கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சுவிட்சர்லாந்தில் செயற்படுகின்றதான IDEEL THE CREATIVE THINK TANK_ மூலம் பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரன் 500000/= பெறுமதியான பொருட்களை வழங்கியுள்ளார்.
இவ் உதவிகளை வழங்கிய சகோதரருக்கு நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட இவ்வாறு அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.