முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 மாணவர்களிற்கு School Bags வழங்கியமை
கற்றல் உபகரணங்கள் இன்மை மாணவர்களின் கற்றலுக்கு தடையாகி விடக்கூடாது எனும் சிந்தையோடு செயலாற்றுகின்ற நாம் எம்மால் முடிந்த உதவிகளை மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து வழங்கி வருகின்றோம்.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (09.01.2023) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் செல்வபுரம் கிராமத்தில் 25 மாணவர்களை தேர்ந்தெடுத்து School Bags வழங்கியுள்ளோம்.
இப் பணிக்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் செயற்படுகின்றதான Open Door Ministry திருச்சபையினர் வழங்கியுள்ளனர்.
இவ் உதவிகளை வழங்கிய திருச்சபையினருக்கு நன்மையை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக எம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட அநேக மாணவர்கள் இவ்வாறான தேவைகளோடு இருக்கின்றனர் இவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.