யாழ் மாவட்ட கல்லூண்டாய் பகுதி 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
இன்றைய நாளிலும் (06.08.2022) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் கல்லூண்டாய் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 80 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தின் பிரதிநிதி ரவி அண்ணா வழங்கிவைத்தார்.
இவ் உதவியினை உரியவர்களிடம் எமது நிறுவனத்தின் யாழ் மாவட்டத்தின் பணியாளர்கள் சகோதரன் சஞ்சீவன் மற்றும் சகோதரர் யோசுவா கொண்டு சேர்த்துள்ளார்.
இவ் உதவியினை செய்த குடும்பத்தினருக்கு மக்கள் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.