வவுனியா மாவட்ட கற்பகபுரம் கிராமத்தில் 63 ஆவது இல்லம் வழங்கப்பட்டது
இன்றைய நாளிலும் (25.06.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 63 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 42 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது..
இவ் இல்லமானது வவுனியா மாவட்டத்தில் கற்பகபுரம் எனும் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை #கனடாவைசேர்ந்தவர்களானகாவியாசுதாகரன்,திவியாசுதாகரன்மற்றும்ஆரணியாசுதாகரன்
ஆகியோர் வழங்கியிருந்தனர். விசேடமாக #ஆரணியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டே இவ் இல்லமானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ் இல்லத்தினை நிர்மாணித்து வழங்குவதற்கு உதவிய சகோதரிகளுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org