மட்டக்களப்பு மாவட்ட ஒருமுழச்சோலை கிராமத்தில் 54 ஆவது இல்லம் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர்.
அந்தவகையில், இன்றைய நாளிலும் (12.04.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 54 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 34 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருமுழச்சோலை எனும் கிராமத்தில் பெற்றோரின்றி பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்தின் பிள்ளைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.
கனடா தேசத்தில் வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர் பாஸ்கரசிவாஜி செல்லத்துரை அவர்களின் நினைவாக அமரர் அவர்களின் மனைவி பரமேஸ்வரி அவர்கள் நிதி உதவியை வழங்கியிருந்தார்கள்.
இவ் இல்லத்திற்கான நிதியை கனடாவில் வாழ்கின்ற தமிழ்செல்வன் அண்ணன் ஏற்படுத்தி பெற்றுத்தந்திருந்தார்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org