மட்டக்களப்பு மாவட்ட மைலம்பாவெளி கிராமத்தில் 42 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 42 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 25 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மைலம்பாவெளி கிராமத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை சிங்கப்பூரைச்சேர்ந்த துரைசிங்கம் பத்மினி தேவி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org