அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
அனைத்து அன்பு உறவுகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய நாளிலும் (01.01.2022) ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை இலண்டனில் வாழ்கின்றதான “கல்முனை ஆனந்தா அச்சக உரிமையாளர்” திரு செல்வச்சந்திரனின் மனைவி றூபா (ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் இங்கிலாந்து தேசத்தின் செயற்பாட்டாளர் ) அவர்கள் வழங்கியுள்ளார்.
இவருக்கு நன்மையைப் பெறும் மக்கள் சார்பில் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Email _ info@jeevaootru.org
Web _ http://jeevaootru.org