திருகோணமலை மாவட்டத்தில் 41 ஆவது இல்லம் வழங்கப்பட்டது
ஜீவஊற்றுஅன்பின்கரம்அமைப்பின்மூலம் மக்கள்நல்வாழ்வு_மையத்தின் இல்லமானது இன்றைய நாளிலும் ( 12.12.2021 ) பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 41 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 24 ஆவது இல்லமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் கப்பல் துறை
பகுதியைச் சேர்ந்த பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பத்தினர்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை அவுஸ்ரெலியா நாட்டில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரன் ஒருவர் வழங்கியுள்ளார்.
இவ் உதவியை ஏற்பாடுசெய்திருந்தார் மக்கள் நல்வாழ்வு மையத்தின் அவுஸ்ரெலியக் கிளை உறுப்பினர் அண்ணன் பிரதீபன் அவர்கள்.
இவ் இல்லத்தை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org