திருகோணமலை மாவட்ட மூதூர் பட்டாளிபுரம் கிராமத்தில் 37 ஆவது இல்லம் வழங்கப்பட்டுள்ளது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 37 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மங்கையம்மாவின் 02 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (05.12.2021) திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பட்டாளிபுரம் கிராமத்தில் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் உபதலைவர் சீலன் ,மதன்,அலெக்ஸ் ஆகியோரின் பங்குபற்றுதலோடு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்தினை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்வில் *திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் S.சிறிதரன் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை சுவிட்சர்லாந்து தேசத்தில் பேர்ன் மாநிலத்தில் வாழ்கின்ற திரு.திருமதி சிவநேசன் மங்கை பிள்ளைகளான DR .சிவாஜினி மற்றும் அருண் தாவீது ஆகியோர் வழங்கியுள்ளார்கள். இவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org