திருகோணமலை மாவட்டத்தில் 40 ஆவது இல்லம் வழங்கப்பட்டது
ஜீவஊற்றுஅன்பின்கரம்அமைப்பின்மூலம் மக்கள்நல்வாழ்வு_மையத்தின் இல்லமானது இன்றைய நாளிலும் ( 12.12.2021 ) பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 40 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 23 ஆவது இல்லமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பாட்டாளிபுரம்
பகுதியைச் சேர்ந்த பொருளாதார நிலையில் பின்தங்கிய பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை இலண்டனைச் சேர்ந்த மகாபுண்ணியம் முரளிகுமார் குடும்பத்தினர் வழங்கியுள்ளார்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org