முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்பிணி தாய்மார்களுக்கு பிள்ளைப்பேற்றுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
இன்றைய நாளிலும் (12.10.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பிணி தாய்மார்களுக்கு பிள்ளைப்பேற்றுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதி உதவியை பிரித்தானிய தேசத்தில் வாழ்கின்ற செல்வி “BELLA JOSEPH” இனது 4️⃣ ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இவரது பெற்றோர் வழங்கிவைத்தனர்.
இவ் உதவியினை உரியவர்களிடம் எமது நிறுவனத்தின் பொருளாளர் சகோதரன் ஜெஸ்மன் கொண்டு சேர்த்துள்ளார்.
இவ் உதவியினை செய்த குடும்பத்தினருக்கு மக்கள் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
Email – info@jeevaootru.org
Web – jeevaootru.org