ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 30 ஆவது இல்லம் களுவங்கேணி கிராமத்தில் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 30 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 14 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (10.09.2021) மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி கிராமத்தில் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான நிதியினை அமரத்துவடைந்த தனது தந்தை வைத்திலிங்கம் சங்கரப்பிள்ளை நினைவாக
மக்கள் நல் வாழ்வு மையத்தின் மூலம் கனடா தேசத்தில் வாழ்கின்ற சிவா சங்கரப்பிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார்.
இவ் இல்லத்தினை அமைப்பதற்கான நிதியை ஏற்படுத்தி தந்தவர் மக்கள் நல் வாழ்வு மையத்தின் கனடா தேசத்தின் செயற்பாட்டாளர் சகோதரன் தமிழ்செல்வன் ஆவார்.
சகல விதத்திலும் நிதி உதவியை வழங்கிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org