ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 27 ஆவது இல்லம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய ஏழாம் ஆண்டு நிறைவும் எட்டாம் ஆண்டு தொடக்கத்தை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங் கள் இலங்கையின் பல பாகங்களில் இடம்பெறுகின்றது. அந்தவகையில்
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 27 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 13 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (01.09.2021) முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வாழ்கின்ற குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான நிதியினை, மக்கள் நல் வாழ்வு மையத்தின் ஸ்தாபகர் முருகானந்தம் ஏற்படுத்தி தந்திருந்தார்.
இவ் இல்லமானது அமரத்துவமடைந்த திரு திருமதி இராமசாமி முத்தம்மா நினைவாக அவரது பேரப்பிள்ளைகளின் நிதி உதவியில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது
இவ் இல்லத்தினை , பெறுநரிடம் “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் செயலாளர் பிரவீன் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன் ஆகியோர் உரியவர்களிடம் கையளித்தனர்.
சகல விதத்திலும் நிதி உதவியை வழங்கிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org