ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 26 ஆவது இல்லம் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 26 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 12 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (20.08.2021) வவுனியா மாவட்டத்தில் கணேசபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான நிதியினை, நியூசிலாந்தில் வாழ்கின்ற மக்கள் நல் வாழ்வு மைய உறுப்பினர் ஜெயக்குமார் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
இவ் இல்லத்தினை , பெறுநரிடம் “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் நிருவாக உறுப்பினர் சகோதரன் சுந்தர் மற்றும் வவுனியா மாவட்ட பணியாளர் சகோதரன் ராஜன் ஆகியோர் கையளித்துள்ளனர்.
சகல விதத்திலும் நிதி உதவியை வழங்கிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org