ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 23வது இல்லம் திறப்புவிழா.
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 23 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 10 ஆவது இல்லமும் இன்றைய நாளில் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் வசிக்கின்ற பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அமைப்பின் செயலாளர் பிரவீன் , பொருளாளர் ஜெஸ்மன், தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதற்கான நிதி அனுசரனையை மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஸ்தாபகர் சகோதரர் முருகானந்தம் வழங்கியிருந்தார். ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாகவும் பயனாளிகள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்த பகுதிகளிலும் நமது பணிகளை செய்ய பணியாளர்கள் ஆயத்தமாக உள்ளார்கள்.
நிதியுதவியை வழங்கி வாழ வழியமைத்த அனைவருக்கும் மற்றும் மக்கள் நல்வாழ்வு மையம் அமைப்பிற்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் தமது மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் இதுபோல நல்ல செயல்களைச் செய்ய எங்களுடன் இணைந்திருங்கள்