ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 22வது இல்லம் திறப்புவிழா.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 22வது இல்லம் ஊடாக மக்கள் நல்வாழ்வு மையம் இன்றைய நாளில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் வசிக்கின்ற பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மையத்தின் 9வது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
அமைப்பின் செயலாளர் பிரவீன் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன், நிர்வாக உறுப்பினர் சுந்தர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதற்கான நிதி அனுசரனையை மக்கள் நல்வாழ்வு மையத்தின் கனடாவில் வாழும் சகோதரர் கணேஸ் வழங்கியிருந்தார். மக்கள் நல்வாழ்வு சார்பாகவும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இதுபோல நல்ல செயல்களைச் செய்ய எங்களுடன் இணைந்திருங்கள்.