புதிதாக அமைக்கப்பட்ட ஜீவ ஊற்று அன்பின் பதினெட்டாவது இல்லம் பயனாளிக்கு வழங்கப்பட்டது
எம் உறவுகளை வாழ வைப்போம்.
தாயக உறவுகளின் இதயத்துடிப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (20.03.2021) புதிதாக அமைக்கப்பட்ட ஜீவ ஊற்று அன்பின் பதினெட்டாவது இல்லம் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு இந்த உதவி வழங்கப்பட உள்ளது.
நிதி அனுசரனையை மக்கள் நல்வாழ்வு மையம் அமைப்பின் ஸ்தாபகர்
செ. *முருகானந்தன்
பிள்ளைகள்அனாமிகா
அஸ்மிதா வழங்கியிருந்தார்
மக்கள் நல்வாழ்வு மையத்தினரின் ஏழாவது இல்லம் என்பதுடன் ஜீவ ஊற்று அன்பின் பதினெட்டாவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மைய உறுப்பினர்கள் சகோதரன் சுந்தரசெல்வன் மற்றும் குமரன் ஆகியோருடன் ஜீவ ஊற்று அன்பின் கரம் உபதலைவர் S.S. சீலன் மற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் திருகோணமலை மாவட்ட பணியாளர்கள் நாதன் மற்றும் மதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் (SSO) Mrs. ஜீவிதன் சுகந்தினி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்தும் எமது முகநூல் பக்கத்தை Like செய்து இணைந்திருந்திருங்கள்
அத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட இணையத் தளத்தில் எல்லா நிகழ்வுகளையும் ஒன்றாக பார்வையிடலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
www.jeevaootru.org