ஜீவ ஊற்று அன்பின் பதினெட்டாவது இல்லம் பயனாளியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் பதினெட்டாவது இல்லம் பயனாளியிடம் இன்றைய நாளில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தினருக்கே இந்த உதவியினை ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக London LIME Minimart கடையின் உரிமையாளர் வழங்கியிருந்தார்.
கையளிப்பு நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன், வவுனியா மாவட்ட இணைப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர் சுந்தர் ஆகியோருடன் மன்னார் மாவட்டம் பணியாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, முல்லைத்தீவு, திருகோணமலை மூதூர், மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜீவ ஊற்று அன்பின் இல்லங்களுக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
எமது முகநூல் பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.