புதிய வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது
வவுனியா மாவட்டத்தில் இன்றைய நாளில் (23.01.2020) புதிய வீடு அமைக்கப்பட்டு பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட்ட இந்த உதவிகளுக்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினர் நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
இந்த இல்லம் ஜீவ ஊற்று அன்பின் கரம் திட்டங்களில் ஒன்றாகிய “ஜீவ ஊற்று அன்பின் இல்லம்” பதினேழாவது இல்லமாகும். அத்துடன் மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஆறாவது இல்லமாகும்.
நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மையத்தின் தலைவர் k. சர்வேஸ்வரன் , செயலாளர் சுந்தரசெல்வன், மற்றும் உறுப்பினர் திவாகர் ஆகியோருடன் ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிர்வாக உறுப்பினர் சுந்தர் வவுனியா மாவட்ட பணியாளர் சகோதரன் இராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன் நலன்விரும்பிகள், சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்து பயனாளியாகிய முதியவரிடம் கையளித்தனர்.
அனைத்து உறவுகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் மேலும் பல பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.