நூறு பாடசாலை மாணவர்களுக்கு முல்லைத்தீவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகத்தில் வைத்து கொப்பிகள் வழங்கப்பட்டது
நூறு பாடசாலை மாணவர்களுக்கு முல்லைத்தீவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகத்தில் வைத்து கொப்பிகள் வழங்கப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நிதி அனுசரனையை ஜீவ ஊற்று அன்பின் கரம், மக்கள் நல்வாழ்வு மையம், Mission mail Netherland நிறுவனங்கள் வழங்கியிருந்தன.
இந்த உதவி திட்டங்களை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன் ஆகியோர் ஒழுங்கமைத்து செயற்படுத்தினர்.
நிதி அனுசரனையை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் இந்த நிகழ்வுகளை உரிய முறையில் செயற்படுத்திய குழுவினருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் எமது புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.