உலர் உணவு நிவாரண பொதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுபத்து குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது
உலர் உணவு நிவாரண பொதிகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறுமத்தான் குளம் பகுதியைச் சேர்ந்த நூற்றுபத்து குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட்ட இந்த உதவிகளுக்கு ஆஸ்திரேலிய, அமெரிக்க,லண்டன், கனடா, இலங்கை ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர் மாணவர்கள் கைகொடுத்தனர்.
இந்த திட்டத்தை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் பொருளாளர் ஜெஸ்மன் மற்றும் செயலாளர் பிரவீண் ஆகியோர் செயற்படுத்தினர்.
நிகழ்வில் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம அலுவலர், RDS ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எமது முகநூல் பக்கத்தை Like செய்து நிகழ்வுகளை நேரலையாக கண்டுகளியுங்கள்.