ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து சைக்கிள்கள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக கடந்த இன்றைய நாளில் 01.01.2020 முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு மத்தியில் பொருளாதார வீழ்ச்சி கண்ட மக்களுக்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினருக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வழங்கப்பட்ட இந்த உதவிகளுக்கு ஆஸ்திரேலிய, அமெரிக்க,லண்டன், கனடா, இலங்கை ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர் உறவுகள் கைகொடுத்தனர்.
இந்த உதவி திட்டங்களை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் பொருளாளர் ஜெஸ்மன் ஆகியோர் ஒழுங்கமைத்து செயற்படுத்தினர்.
நிதி அனுசரனையை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் இந்த நிகழ்வுகளை உரிய முறையில் செயற்படுத்திய குழுவினருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் எமது புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.