பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
பதுளை மாவட்டத்தில் ஹட்டன் பூனாகலை பகுதியைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் அல்லல் படும் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக மாடு வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திலும் மூதூர் பகுதியைச் சேர்ந்த சகோதரன் ஒருவருக்கு கடைக்கு தேவையான சுமார் ஐம்பதாயிரம் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது.
இவற்றுக்கான நிதி அனுசரனையை ஜீவ ஊற்று அன்பின் கரம் லண்டன் இணைப்பாளராக செயற்படும் திரு திருமதி செல்வா றூபா தம்பதியினர் தமது நாப்பதாவது திருமண ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர்களே இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் மாவட்ட பணியாளர்கள் இந்த உதவிகளை உரியவர்களிடம் கொண்டு சேர்த்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.