வவுனியா கனகராயன் குளம் பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகளை வழங்கினர்
ஜீவ ஊற்று அன்பின் கரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மையம் இணைந்து இன்றைய நாளில் வவுனியா கனகராயன் குளம் பகுதியைச் சேர்ந்த முப்பத்து மூன்று குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகளை வழங்கினர்.
புரைவி புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்த உதவிகளை ஜீவ ஊற்று அன்பின் கரம் நிர்வாக உறுப்பினர் சுந்தர் உரியவர்களிடம் கொண்டு சேர்த்தார்.
இதற்கான நிதி அனுசரனையை மக்கள் நல்வாழ்வு மையத்தினர் வழங்கியிருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னும் பல பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்தும் எம்முடன் இணைந்து இருங்கள் நாம் உடனுக்குடன் தகவல்களை அறிய தர ஆயத்தமாக உள்ளோம்.