டிக்கோயா பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு மத்தியில் அநேகர் தொழில்களை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். அவ்வாறானவர்களை ஜீவ ஊற்று அன்பின் கரம் அடையாளம் கண்டு நாட்டின் பல பகுதிகளில் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட இந்த உதவியும் அந்த அடிப்படையில் தான் வழங்கப்பட்டது.
லண்டன் தேசத்தில் வசிக்கும் திரு திருமதி செல்வா றூபா தம்பதியினரின் நாப்பதாவது திருமண ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர்களே இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்திலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் கால் பதித்து பணிகளை ஆரம்பித்துள்ளது. அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.