மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 12 அடி கொண்ட பத்து தகரங்கள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 12 அடி கொண்ட பத்து தகரங்கள் வழங்கப்பட்டது.
மழைக்காலத்தில் இவர்கள் இருக்கும் வீட்டின் கூரை மோசமான நிலையில் சேதமடைந்து இருந்ததால் இவ் அவசர உதவி வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை லண்டன் தேசத்தில் உள்ள காக்கும் கரங்கள் அமைப்பினரால் வழங்கப்பட்டது.
இவ் உதவியை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் கிழக்கு மாகாண பணியாளர்களான திலீப் மற்றும் சாயி ஒழுங்கமைத்து வழங்கினர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது போன்ற உதவிகள் தேவையான நிலையில் தாயக மண்ணில் பலர் இருப்பதால் நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.