முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில்(16.10.2020) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு தேராவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கான்சர் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த 27குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட உதவியினை நெதர்லாந்து தேசத்தில் உள்ள வெளிச்ச வீடு தேவாலய போதகர் மற்றும் விசுவாசிகள் வழங்கி இருந்தனர்.
உதவிகளை வழங்கிய சபையினருக்கும் இந்த உதவி திட்டத்தை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் குழுவினருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.