வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (07.09.2020) யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த தாய் தகப்பனை இழந்து தனியாக வசித்து வந்த மூன்று சகோதரிகளை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் வாழ்வாதார திட்டத்தின் கீழ் இரண்டு ஆடுகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை பிரான்ஸ் தேசத்தில் வசிக்கும் சகோதரி அஞ்சலா வழங்கியிருந்தார்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் தென்மராட்சி இணைப்பாளர் போதகர் அன்ட்றூ மற்றும் போதகர் கமல் ஆகியோர் இவற்றை ஒழுங்கு செய்து வழங்கியிருந்தனர்.
இதுபோன்ற உதவிகள் தேவைப்படுவோர் தாயக மண்ணில் அதிகமாக இருப்பதால் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
T- JEJEEVAN
BELGIUM
www.jeevaootru.org
www.jeevaootru.com
0032499837861