மன்னார் மாவட்டத்தில் சகோதரன் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டிகள் திருத்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது
ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள உபகரணங்கள் சுவிஸ் லுகானா பகுதியைச் சேர்ந்த சகோதரன் நில்சன் என்பவரால் மேற்குறித்த சகோதரனுக்கு வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட சகோதரன் யுத்த காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒருவர் என்பதுடன் துவிச்சக்கர வண்டிகள் பழுதுபார்க்கும் கடையை நடத்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட உதவியினை எமது மன்னார் மாவட்ட ஜீவ ஊற்று அன்பின் கரம் இணைப்பாளர் தமிழ்செல்வன் அவர்கள் வழங்கி வைத்தார்
மேலும் உதவி செய்த சகோதரரையும் உதவிகள் வழங்கப்பட்ட சகோதரரையும் ஆண்டவர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக..
மேலும் இது போன்று நீங்களும் உங்கள் மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் நன்கொடைகள் என்பற்றை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்