கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின்கரத்திற்கூடாக
இன்று (25.02.2020) முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுவன் ஒருவனை இனங்கண்டு உடனடி தேவையான கட்டிலும் மெத்தையும் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை செய்துதவிய லண்டன் காக்கும் கரங்கள் ஸ்தாபகர் அன்ரன் யூதாகரன் வெனிற்றா றோகினி அவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இச் சிறுவனுக்கு இன்னமும் அதிகமான மருத்துவத் தேவைகள் இருப்பதனால் நீங்களும் எம்முடன் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்க முடியும்.