மருத்துவ செலவுக்கு 40000 வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின்கரம் ஊடாக இன்றைய நாளில் (28.02.2020) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் மிகவும் வறுமையில் கடுமையாக நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற சிறுவன் ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூபா 40000 வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை எமது நிறுவன சுவிட்சர்லாந்து கிளை றொசான் (20000) மற்றும் நெதர்லாந்து சிவா(20000) ஆகியோர் வழங்கி இருந்தனர்.
இவ்வுதவியை உரிய இடத்திற்கு கொண்டு சேர்ந்த எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் சுவிட்சர்லாந்து இணைப்பாளர் றொசானின் துனைவியாருக்கும் எமது நன்றிகள்.
இச் சிறுவனுக்கு இன்னமும் அதிகமான மருத்துவத் தேவைகள் இருப்பதனால் நீங்களும் எம்முடன் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்க முடியும்.