வாழ்வாதார உதவிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின்கரம் ஊடாக இன்றைய நாளில் (21.02.2020) அம்பாறை பெரிய நீலாவனை கல்முனையில் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு தேயிலை பொதியிட்டு விற்பனை செய்வதற்கான வாழ்வாதார உதவியாக ரூபா 15000 வழங்கப்பட்டது.
அத்தோடு இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட
தேவகுமார் என்பவருக்கும் அரிசி மாவு பொதியிட்டு விற்பனை செய்வதற்கான வாழ்வாதார உதவியாக ரூபா 8000 வழங்கப்பட்டது.
அத்தோடு பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு நிவாரண பொதியும் ரூபா 2000 பெறுமதியில் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை செய்துதவிய லண்டன் காக்கும் கரங்கள் ஸ்தாபகர் அன்ரன் யூதாகரன் வெனிற்றா றோகினி அவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வுதவியை உரிய இடத்திற்கு கொண்டு சேர்ந்த எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் மாவட்ட இணைப்பாளர்களுக்கும் எமது நன்றிகள்.