புதிய தலைமை அலுவலகத்தில் வைத்து கொப்பிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம்
கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணி
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய தினம் (10.01.2020) முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் எமது நிறுவன தலைமை அலுவலகத்தில் 40 மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை தனது பிறந்த நாளை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள றஜீவன் வழங்கியிருந்தார்.
எமது நிறுவனத்தின் பொருளாளர் ஜெஸ்மன், மற்றும் செயலாளர் பிரவீன் ஆகியோர் நிகழ்வை பெறுப்பேற்று செயற்படுத்தி இருந்தனர்.
நீங்களும் இவ்வாறு ஏழை மாணவர்களின் கல்விக்கு கரங் கொடுக்க விரும்பினால் எம்முடன் இணைந்து கொள்ள முடியும்.