வவுனியாவில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம்
கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ்
இன்றைய தினம் (07.01.2020) வவுனியா ராமகிருஷ்ண வித்தியாலயத்தில் 41 மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை வழங்கிய லண்டனில் உள்ள ரட்ணகுமார் விமலராணி குடும்பத்தினருக்கு எமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் கலந்து சிறப்பித்த எமது நிறுவனத்தின் பொருளாளர் ஜெஸ்மன், நிர்வாக உறுப்பினர் போதகர் சுந்தர் மற்றும் நியூசிலாந்து இணைப்பாளர் சகோதரர் ரவி ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்களும் இவ்வாறு ஏழை மாணவர்களின் கல்விக்கு கரங்கொடுக்க விரும்பினால் எம்முடன் இணைந்து செயற்பட முடியும்.