தாய் தந்தையை இழந்த சகோதரிகள் இருவருக்கு உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக கடந்த (13.12:2019) அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரிகளுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேற்படி சகோதரிகள் தாய் தந்தையை இழந்த நிலையில் வசித்து வந்தவர்கள். இன்னும் இதுபோன்ற பல உதவிகள் தேவையான நிலைமையில் தான் இவர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஜீவ ஊற்று அன்பின் கரம் கண்டு கொண்டது.
இவ் உதவிகள் ஜீவ ஊற்று அன்பின் கரம் New Zealand இணைப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது
எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்கள் விரைவாக செயற்பட்டு மேற்படி உதவியை உரியவர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
தேவன் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!