திருகோணமலையில் 80 பாடசாலை மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கப்பட்டன
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக கடந்த (29:11:2019) அன்று திருகோணமலை சல்லி அம்பாள் தமிழ் வித்தியாலய பாடசாலையை சேர்ந்த 80 மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது.
இவ் உதவியினை
EL saddai prayer ministry zurich Switzerland திருச்சபையினர் வழங்கினர்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் கல்விக்கு கரம் கொடுப்போம் உன்னத பணியின் கீழ் 25000 கொப்பிகள் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே நாட்டின் பல மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
இவ் உதவி நடவடிக்கைகள் எம் கிழக்கு மாகாண இணைப்பாளர் சீலன் பொறுப்பேற்று செயற்படுத்தினார்.
எல்லோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தொடர்ந்தும் இது போன்ற பல திட்டங்கள் வடிவமைக்க பட்டு இருப்பதால் நீங்களும் எம்முடன் இணைந்திருங்கள்.