அடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகள் வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (06.12.2019)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் காணப்படும் கோடைமேடு கிராமத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்த அறுபது (60) குடும்பங்களுக்கு எமது கிழக்கு மாகாண இணைப்பாளருடன் மட்டக்களப்பு மாவட்ட பணியாளர்களும்இணைந்து உலர் உணவு பொதிகளை வழங்கி வழங்கி வைத்தனர்.
இதற்குரிய நிதி உதவியை செய்துதவிய Imagine Compassion International [Australia] அமைப்பினருக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள்.
இன்னமும் அதிகமாக எம் உறவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீங்களும் எம்முடன் இணைந்து இவ் உன்னதமான பணியில் பயனிக்க முடியும் எனவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.