காரைநகர் மற்றும் பாண்டியன்குளத்தை தொடர்ந்து மட்டக்களப்பிலும் கொப்பிகள் வழங்கப்பட்டது
கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ்
ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (29.11.2019) மட்டக்களப்பு மண்டூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை நூற்று முப்பது [130] மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது.
அத்தோடு மாணவர்களுடைய ஆளுமை திறனை விருத்தி செய்வதற்கான பயனுள்ள கருத்துக்களும் நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களால் வழங்கப்பட்டது .
இவ் உதவியை வழங்கிய ஜேர்மனி தேசத்தில் உள்ள எமது கிளை நிறுவன மக்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.
ஏற்கனவே காரைநகர் மற்றும் பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் இது போன்ற பணிகள் இடம்பெற இருப்பதால் எம்முடன் இணைந்திருங்கள்.